search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சிப்பாறை அணை"

    • நீர்தேக்கங்கள் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகளுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
    • வைகை அணைக்கான ஒப்பந்தப்புள்ளி நாளை (புதன்கிழமை), அமராவதி அணைக்கான ஒப்பந்தப்புள்ளி வருகிற 20-ந்தேதியும் திறக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக 15 பெரிய அணைகள் உள்பட 90 நீர் தேக்கங்கள் உள்ளன. இவை அனைத்தும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 மண்டலங்களாக பிரித்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நீர்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224.297 டி.எம்.சி.யாகும். (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி தண்ணீர்) இதில் நேற்றைய நிலவரப்படி 165.637 டி.எம்.சி. இருப்பு, அதாவது 73.85 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

    நீர்தேக்கங்களுக்கு பருவமழையால் ஆண்டு தோறும் வரும் நீரால் மண் அடித்து வரப்படுவதால் ஏரியின் கொள்ளளவு ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் நீர்தேக்கங்கள் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகளுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    அந்தவகையில் 2020-2021-ம் ஆண்டு நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கையின்போது சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர், தேனி மாவட்டத்திலுள்ள வைகை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை ஆகிய 4 அணைகளின் கொள்ளளவை மேம்படுத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தூர்வாரும் பணிகளுக்கு சட்ட ரீதியான அனுமதி மற்றும் ஆலோசனைகளை பெற, தனியார் நிறுவனங்களை நியமிக்க நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது. ரூ.15.55 கோடியில் 4 அணைகள் தூர்வார முடிவு செய்துள்ள நிலையில், அதற்காக சட்டரீதியான அனுமதி, ஆலோசனைக் கட்டணம், தகுந்த முகமைகளை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை தொடங்குவதற்காக அரசு முதல் கட்டமாக நீர்வளத்துறைக்கு ரூ.3.63 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    அந்தவகையில், வைகை அணைக்கான ஒப்பந்தப்புள்ளி நாளை (புதன்கிழமை), அமராவதி அணைக்கான ஒப்பந்தப்புள்ளி வருகிற 20-ந்தேதியும் திறக்கப்படுகிறது. அதேபோல், மேட்டூர் மற்றும் பேச்சிப்பாறை அணைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு நீர்வளத்துறையின் பரீசிலனையில் உள்ளது. ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு 4 அணைகளுக்கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர், திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு 4 அணைகளும் தூர்வாரப்படுகிறது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையில் தேங்கியுள்ள மணலை 3 ஆண்டுகள் எடுத்து விற்பதன் மூலம் ரூ.315 கோடியும், பேச்சிப்பாறை அணை மூலம் ரூ.140 கோடியும், அமராவதி அணை மூலம் ரூ.250 கோடியும், மேட்டூர் அணை மூலம் ஓராண்டுக்கு ரூ.112 கோடியும் தோராயமாக வருவாய் கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

    • பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் 250 கனஅடியில் இருந்து 150 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
    • 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 64.12 அடி நீர்மட்டம் உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி கடல் பகுதியில் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

    வானிலை மாற்றம் காரணமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், மலையோர கிராமங்களில் கனமழை நீடித்தது. இதன் காரணமாக குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட் டது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் மழை நீடிக்கும் என்று கூறப்பட்டதால், அணையின் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது.

    திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்தில் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. மாம்பழத்துறையாறு பகுதியில் 10 மி.மீட்டர், ஆணைக்கிடங்கு பகுதியில் 9.6, முள்ளங்கினாவிளை 7.2, அடையாமடை 6.8 என மிதமான அளவிலேயே மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் வரத்து குறைந்துள்ளது.

    இதனை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் 250 கனஅடியில் இருந்து 150 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக 556 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது நீர்மட்டம் 42.74 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 278 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 64.12 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 91 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மதகுகள் வழியாக 160 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 50.11 அடியாக உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு1 மற்றும் 2 அணைகளில் 14.46 மற்றும் 14.56 அடி நீர்மட்டம் உள்ளது. 25 அடி கொண்ட முக்கடல் அணையில் 16.4 அடியாக நீர்மட்டம் உள் ளது.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டாலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிக அளவே கொட்டுகிறது. இதனால் இன்றும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை தினமான இன்று திற்பரப்பு வந்த பலரும் ஏமாற்றமடைந்தனர்.

    • அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது.
    • திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.

    திருவட்டார்:

    குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக மழை பெய்யாத நிலையிலும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது.

    பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 772 கன அடி தண்ணீர் வரும் நிலையில் மதகுகள் வழியாக 478 கனஅடியும், உபரி நீராக 378 கன அடியும் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக கோதையாறு ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது.

    இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று மாலை தடை விதிக்கப்பட்டது.

    இன்று காலையும் அருவியில் தண்ணீர் அதிகமாக கொட்டுவதால் குளிக்க தடை நீடிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு ஆனந்த நீராட வந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

    பேச்சிப்பாறை அணை பகுதியில் நேற்று சாரல் மழை பெய்தது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 44.46 அடியாக உள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.2 அடியாக உள்ளது. இந்த அணைக்கு விநாடிக்கு 625 கன அடி தண்ணீர் வநம் சூழலில் 460 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    • பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து மதகுகள் வழியாகவும் உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    நாகர்கோவில்:

    தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக குமரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றும் மாவட்ட முழுவதும் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    கொட்டாரம், கன்னியாகுமரி, மயிலாடி, சாமிதோப்பு, அஞ்சுகிராமம் பகுதிகளில் இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது இன்று காலை 6 மணி வரை தொடர்ச்சியாக 8 மணி நேரம் பெய்தது. அதன் பிறகும் காலையில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

    மாவட்டத்தில் அதிகபட்ச மழை மயிலாடியில் பெய்துள்ளது. அங்கு 14 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. கனமழையின் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

    நாகர்கோவிலிலும் நேற்று இரவு மழை பெய்தது. இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை கொட்டியது. கன்னிமார், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, பாலமோர், தக்கலை, இரணியல், திருவட்டார், குளச்சல், குருந்தன்கோடு, களியல், சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், அணை பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து மதகுகள் வழியாகவும் உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப தண்ணீரை கூடுதலாக வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆறு மற்றும் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    குழித்துறை சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிப்பதற்கான தடை இன்று 4-வது நாளாக தடை நீடிக்கிறது. திற்பரப்பு அருவி அருகே உள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.


    ஈத்தாமொழி மணியன்விளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததால் பஸ்கள் திருப்பி விடப்பட்டது. அப்போது பஸ் ஒன்று அந்த பகுதியில் உள்ள பள்ளத்தில் சிக்கிய காட்சி.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.25 அடியாக உள்ளது. அணைக்கு1,239 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 636 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 520 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 51.30 அடியாக உள்ளது. அணைக்கு 678 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார் அணைகளின் நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 2.70 அடியாக உள்ளது.

    சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. கோணம், பறக்கை பகுதிகளில் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

    தொடர் மழைக்கு நேற்று முன்தினம் 7 வீடுகள் இடிந்து இருந்த நிலையில் நேற்று மேலும் 5 வீடுகள் இடிந்துள்ளது. கீரிப்பாறை, குலசேகரம், தடிக்காரன்கோணம், தோவாளை, செண்பகராமன் புதூர் பகுதிகளில் ரப்பர் பால் மற்றும் செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொட்டி தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி எடுத்தது. நாகர்கோவில் பகுதியில் பல்வேறு பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.

    தோவாளை, அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர் பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது. நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வடிந்த நிலையில் தெருக்களிலும் வீடுகளை சுற்றியும் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

    அந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. நேற்று இரு அணைகளுக்கும் ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு இன்றும் 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.24 அடியாக உள்ளது. அணைக்கு 866 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 514 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி நீர்மட்டம் 75.12 அடியாக உள்ளது. அணைக்கு 1077 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 503 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்1- நீர்மட்டம் 16.73 அடியாக உள்ளது. அணைக்கு 138 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 129 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 3 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து ஆறுகளில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர் மழைக்கு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 36 வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 12 வீடுகள் இடிந்துள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 5 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 2 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்துள்ளன.

    மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று வரை நடந்த கணக்கெடுப்பில் 605 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    • கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • கன்னியாகுமரி பகுதியில் இன்று 2-வது நாளாக சூறைக்காற்று வீசி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மழை சற்று குறைந்துள்ளது. ஆனால் மாவட்டம் முழுவதும் சூறைக்காற்று வீசி வருகிறது. அணைப் பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் மழை குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதனையடுத்து அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டாலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு 3-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.12 அடியாக உள்ளது. அணைக்கு 1639 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1550 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74.80 அடியாக உள்ளது. அணைக்கு 1849 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1432 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.70 அடியாக உள்ளது. அணைக்கு 187 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 129 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. பொய்கை அணை நீர்மட்டமும் உயர தொடங்கி உள்ளது.

    ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சானல்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. 15-க்கும் மேற்பட்ட குளங்கள் உடைந்துள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக சீரமைப்பு பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மழைக்கு மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 36 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 18 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 8 வீடுகளும், கல்குளம் தாலுகாவில் 3 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 6 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.

    கன்னியாகுமரி பகுதியில் இன்று 2-வது நாளாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள மீனவர் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சூறை காற்றுக்கு அகஸ்தீஸ்வரம், வடுவன் பற்று பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தன. சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மின்கம்பங்கள் சேதமானதையடுத்து நேற்று இரவு தென்தாமரைகுளம் சுற்றுவட்டார பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. நள்ளிரவு மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. 

    • திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை
    • முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவான 25 அடி நிரம்பி வழிகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.

    மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பி உள்ளது. அணைகள், குளங் கள் நிரம்பி உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அணைகள் மற்றும் குளங் கள் நீர்மட்டத்தை கண் காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ சாணி அணை பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வருகிறது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்ததையடுத்து அணை யில் இருந்து வெளி யேற்றப்படும் தண்ணீரின் அளவையும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அதிகரித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று 100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று அணையிலிருந்து வெளி யேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட் டுள்ளது.

    அணையில் இருந்து 401 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 355 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றாறு 1 அணை யிலிருந்தும் 129 கன அடி உபரிநீரும், 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழி யாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருவதால் கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரு கிறது. இதனால் திற்பரப்பு அருவியில் இன்று 3-வது நாளாக குளிக்க தடை விதிக் கப்பட்டுள்ளது. அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டதால் சுற்றுலா பணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.05 அடியாக உள்ளது. அணைக்கு 595 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.31 அடியாக உள்ளது. அணைக்கு 460 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றார்-1 அணை யின் நீர்மட்டம் 15.81 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.91 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 8.20 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவான 25 அடி நிரம்பி வழிகிறது.

    • கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
    • இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. தினமும் காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தாலும் மாலையில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அதிகப்பட்சமாக சிற்றார் 2-ல் 90 மில்லி மீட்டர் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை கனமழை பெய்தது. இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. மழையில் இருந்து தப்பிக்க பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு சென்றனர்.

    பூதப்பாண்டி, கன்னிமார், குழித்துறை, மயிலாடி, கொட்டாரம், இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோரப்பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றாறு-1 அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று அணையிலிருந்து தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அணை நிரம்பிவருவதையடுத்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோதை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர்களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்பட்டினம் கடலில் சென்று சேரும். எனவே கோதையாறு தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருவதால் இன்றும் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.14 அடியாக இருந்தது. அணைக்கு 468 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 328 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.18 அடியாக உள்ளது. அணைக்கு 674 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. தொடர் மழைக்கு அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 4 வீடுகளும் தோவாளை தாலுகாவில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பழையாறு, வள்ளியாறு, கோதை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பாசன குளங்களும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் குளங்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகளை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 6.6, பெருஞ்சாணி 10.2, சிற்றாறு 1-8.6, சிற்றார் 2-90, பூதப்பாண்டி 19.2, களியல் 60, கன்னிமார் 19.2, கொட்டாரம் 4, குழித்துறை 80, நாகர்கோவில் 12.4, சுருளோடு 10, தக்கலை 32, குளச்சல் 6, இரணியல் 15, பாலமோர் 5.2, மாம்பழத்துறையாறு 29, திற்பரப்பு 17.3, கோழிப்போர்விளை 12.6, அடையாமடை 18.1, குருந்தன்கோடு 16.4, முள்ளங்கினாவிளை 3.4, ஆணைக்கிடங்கு 28.4, முக்கடல் 7.4.

    • நாகர்கோவிலில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது.
    • பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 30.80 அடியாக இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இடைவிடாது மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.

    மாலையில் சற்று மழை குறைந்து இருந்த நிலையில் நள்ளிரவு மீண்டும் மழை பெய்தது. இன்று காலையில் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து பள்ளிகளுக்கு இன்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.

    நாகர்கோவிலில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. மயிலாடி பகுதியில் நேற்று விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இன்று காலையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அங்கு அதிகபட்சமாக 110.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், சுருளோடு, தக்கலை, குளச்சல், மாம்பழத்துறையாறு, திற்பரப்பு, கோழிபோர்விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 1¼ அடியும் பெருஞ்சாணி அணை 2 அடியும் உயர்ந்துள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக மழை பெய்த பிறகும் உயராத நிலையில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

    இதேபோல் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 5½ அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு அணை நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 30.80 அடியாக இருந்தது. அணைக்கு 1546 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 274 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 57.85 அடியாக உள்ளது. அணைக்கு 1564 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.17 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.27 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 24.61 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 10 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 29.2, பெருஞ்சாணி 67.8, சிற்றாறு 1-42, சிற்றாறு 2-46.4, பூதப்பாண்டி 31.4, களியல் 79, கன்னிமார் 20.2, கொட்டாரம் 62, குழித்துறை 97.2, மயிலாடி 110.2, நாகர்கோவில் 72.2, புத்தன்அணை 63.2, சுருளோடு 56.4, தக்கலை 59.8, குளச்சல் 26.4, இரணியல் 18.2, பாலமோர் 62.6, மாம்பழத்துறையாறு 93.8, திற்பரப்பு 26.6, ஆரல்வாய்மொழி 10.4, கோழிப்போர்விளை 84.5, அடையாமடை 52.3, குருந்தன்கோடு 28, முள்ளங்கினாவிளை 57.8, ஆணைக்கிடங்கு 94, முக்கடல் 26.

    • பேச்சிப்பாறை அணை 18.29 அடி ஆனது
    • பாலமோரில் 77.6 மில்லி மீட்டர் மழை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தாலும் இரவில் மழை பெய்து வருவதால் வெப்பம் சற்று தணிந்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    நாகர்கோவில், கொட்டா ரம், மயிலாடி, தக்கலை, குளச்சல், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இன்று காலையிலும் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    அருவியில் குளிப்பதற்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தி ருந்தனர். அவர்கள் அருவி யில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிக பட்சமாக 77.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை களுக்கு வரக்கூடிய நீர்வ ரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

    இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத்தொடங்கியுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 6½ அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 18.29 அடியாக உள்ளது. அணைக்கு 1369 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 589 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 35.05 அடியாக உள்ளது. அணைக்கு 1563 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாவட் டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 16.2, பெருஞ்சாணி 14.4, புத்தன்அணை 12.8, சிற்றார் 1 -11, சிற்றாறு 2-6, பூதப்பாண்டி 9.2, களியல் 5.3, குழித்துறை 6.4, நாகர்கோவில் 2.4, சுருளோடு 2.4, தக்கலை 7.3, குளச்சல் 16.4, இரணியல் 4.2, பாலமோர் 77.6, மாம்பழத்துறையாறு 14.2, திற்பரப்பு 4.8, அடையா மடை 7, முள்ளங்கினாவிளை 7.2, முக்கடல் 5.2.

    மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே கடைமடை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட கன்னிபூ நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் இருந்தது. தற்போது பெய்துவரும் இந்த மழை விவசாயத்திற்கு கை கொடுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக திறக்கப்படுகிறது
    • தூர்வாரப்படாததால் கழிவுகள் தேங்கி தண்ணீர் கடைவரம்பு பகுதிகளுக்கு செல்ல முடியாத அவலம்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இரண்டாம் போக சாகுபடியான கும்பபூ சாகுபடி முடிந்து அறுவடைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக கொளுத்திய கடும் வெயிலினால் ஆறு, கால்வாய், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தன.

    குமரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய் எனப்படும் என்.பி. கால்வாய் இந்த ஆண்டு தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து தூர்ந்து போய் கிடந்தது. இந்த கால்வாய் தொடங்கும் சீதப்பால் அருகே உள்ள சாட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில் உள்ள மேட்டுக்கால்வாய் மற்றும் பள்ளக்கால்வாய் பகுதி வரை 24 கிலோ மீட்டர் 560 மீட்டர் தூரம் வரை கால்வாயின் இருபுறமும் செடி, கொடிகள் அகற்றப்படாமலும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்ட நிலையிலும் பராமரிக்கப்படாமல் கிடந்தது.

    இந்த நிலையில் முதல் போக சாகுபடியான கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கடந்த 1-ந் தேதி கொட்டாரம் புத்தனாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் 20 நாட்களுக்கு பிறகு நேற்று தான் கொட்டாரம் பகுதியில் தண்ணீர் வந்து சேர்ந்தது. அதுவும் கொட்டாரம் பகுதியில் உள்ள புத்தனாறு கால்வாயில் தூர்வாரப்படாததால் தண்ணீர் இருபுறமும் கரைபுரண்டு ஓடி வரும்போது பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்தபடி வந்தன. இதனால் ஆங்காங்கே தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டு நிற்கின்றன. மேலும் கொட்டாரம் கடைவரம்பு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சரியாக வந்து சேரவில்லை.

    இதனால் கொட்டாரம் பகுதியில் முதல் போக கன்னிப்பூ சாகுபடி பணி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே கொட்டாரம் பகுதியில் உள்ள நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாயில் அடைபட்டு நிற்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்றி கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் தடங்கல் இன்றி வந்து சேர பொதுப்பணித்துறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.38 அடியாக இருந்தது.
    • சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 9.87 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மதியம் நேரங்களில் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் வெயில் அடித்து வந்தது. மதியத்துக்கு பிறகு சீதோஷண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மேற்கு மாவட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது.

    சிற்றாறு-1 அணைப் பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 90.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தக்கலை, அடையாமடை, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்துள்ளனர்.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.38 அடியாக இருந்தது. அணைக்கு 317 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.50 அடியாக உள்ளது. அணைக்கு 95 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.77 அடியாக உள்ளது.

    அணைக்கு 317 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 9.87 அடியாக உள்ளது. அணைக்கு 331 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 19.50 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 49.6, பெருஞ்சாணி 5.4, சிற்றாறு 1-90.2, சிற்றாறு 2-62.2, பூதப்பாண்டி 5.2, புத்தன் அணை 4.2, தக்கலை 2, பாலமோர் 15.2, மாம்பழத்துறையாறு 4, திற்பரப்பு 18.3, அடையாமடை 7, முள்ளங்கினாவிளை 17.4.

    ×